ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி சார்பில் மாணவ, மாணவிகளுக்கான "ஹாக்கத்தான் 2017" நடைபெற்றது

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் கணினி திறன்பேசி மற்றும இணையம் சார்ந்த திட்டப் பணிகளை உருவாக்கும் போட்டி ஹாக்கத்தான் 2017 என்னும தலைப்பில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், திறன்பேசிக்கான செயலிகள், இணையம் பயன்பாடுகள் மற்றும் "இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்" எனப்படும் அனைத்து பொருட்களையும் இணையத்தில் இணைக்கும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை 24 மணி நேரத்திற்குள் உருவாக்கும் போட்டியில் மாணவ, மாணவியர்கள் ஈடுபட்டனர்.



இதன் துவக்க விழாவானது கடந்த 17ம் தேதியன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி முதல்வர் சி.நடராஜன், ஹாப் க்ளூஸ் மனிதவளத்துறை தலைவர் பாபு விட்டல் மற்றும் பயோடா நிறுவனத்தின் மூத்த மனியவள அதிகாரி விஜயலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இதில், கல்லூரி முதல்வர் சி.நடராஜன் அனைவரையும் வரவேற்று துவக்கவுரையாற்றினார். அப்போது, இக்கல்லூரியின் வளர்ச்சி குறித்தும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். 



இதைத்தொடர்ந்து பேசிய பாபு விட்டல், மாணவர்கள் ஒரு விசயத்தை கையாளுகையில் தனது சிந்தனை திறன் மற்றவர்களை போல் இல்லாமல் புதிய கோணத்தில் இருக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து, மாணவர்களிடையே கலந்துரையாடலில் ஈடுபட்டார்.



அடுத்து பேசிய விஜயலட்சுமி, "மாணவர்கள் சுயசிந்தனையுடன் சவால்களை சந்திக்க வேண்டும்" என்று கூறினார்.



இந்நிகழ்வின் நிரைவு விழாவில் ஐபிஎஸ் திலீப், இனோஸ்பேஸ் டாக்டர் விமல், டெக்மகேந்திரா நெல்சன், இம்பிசர் கணேஷ் கண்ணா, ராஜ்மோகன் ஆகியோர் மாணவர்கள் உருவாக்கிய செயலிகளை மேற்பார்வையிட்டு அதில் 10 சிறந்த போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.



Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...